
பேக் டூ பேக் படங்களைப் பார்த்த ராஜமவுலி
நேற்று, "பேக் டூ பேக்" இரண்டு படங்களைப் பார்த்து அது பற்றிய தன்னுடைய பாராட்டுக்களைப் பதிவிட்டுள்ளார். “நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு படங்களைப் பார்த்தேன். ஸ்வீட்டி எப்போதும் போல அழகாகவும், பொலிவாகவும் இருக்கிறார். நவீன் பொலிஷெட்டி நிறைய சிரிப்பையும், வேடிக்கையையும் வழங்கினார். மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி குழுவிற்கு வாழ்த்துகள். இவ்வளவு உணர்ச்சிகரமான விஷயத்தை மிகவும் வேடிக்கையாகக் கையாண்ட உங்களுக்குப் பாராட்டுக்கள், மகேஷ்,” என படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.
அடுத்து "ஜவான்" குழுவினரைப் பாராட்டி, “பாக்ஸ் ஆபீஸின் பாட்ஷா" ஷாரூக் என்பதற்கு இதுவே காரணம்.. இந்த பூமியை உலுக்கிய ஒரு ஓபனிங். வடக்கிலும் வெற்றிப் பயணத்தைத் தொடர இயக்குனர் அட்லீக்கு வாழ்த்துகள், அபார வெற்றி பெற்றதற்காக "ஜவான்" குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜமவுலியின் பாராட்டால் இரண்டு படங்களுக்கும் இன்னும் கூடுதலான வரவேற்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!