
டிசி, மார்வெல் போல புதிய ஒரு உலகை உருவாக்க விரும்பினோம் - ‛வெப்பன் இயக்குனர்
இந்த நிகழ்வில் இயக்குனர் குகன் பேசியதாவது: என் தயாரிப்பாளர் மன்சூர் சார், அஜீஸ், அப்துல் இவர்களுக்கு நன்றி. எந்த ஒரு தயாரிப்பாளரும் இந்த கதைக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் தர யோசிப்பார்கள். என் கேரியரில் நிச்சயம் இது மிகப் பெரிய படி. கதையில் நம்பிக்கை வைத்து சத்யராஜ் சார் ஓகே சொன்னதும் படம் இன்னும் பெரிதானது. அவருக்கு நன்றி. அடுத்து வசந்த் ரவி சாரும் கதையின் மீது நம்பிக்கை வைத்தார். டிசி, மார்வெல் போல புதிய ஒரு உலகை உருவாக்க விரும்பினோம். ராஜீவ் மேனன் சார் சிறப்பாக செய்துள்ளார். தான்யா ஹோப் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அனைவருக்கும் நன்றி. என்றார்.
சத்யராஜ், பேசும்போது "இது போன்ற கதைகளில் நாங்கள் ஹீரோக்கள் இல்லை. இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஸ்டண்ட் மாஸ்டர், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் டீம், தயாரிப்பாளர்கள் இவர்கள்தான் ரியல் ஹீரோஸ். இதுபோன்ற படங்களுக்கு தயாரிப்பாளர் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் செலவு செய்ய வேண்டும். "பாகுபலி" படத்தின் போது தயாரிப்பாளர் சோபுவை பார்த்து பிரபாஸ் என்னிடம் விளையாட்டாக, "பாருங்க சார், யாரோ பணம் போட்டு படம் எடுப்பது போல ஜாலியாக வந்து போகிறார்" என்று சொல்வார். அதே போலவே மன்சூர் சாரும் உள்ளார். வசந்த் ரவி, தான்யா ஹோப், ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை எல்லாரும் சிறப்பாக செய்துள்ளனர்" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!