
சந்திரமுகி 2, இறைவன், மார்க் ஆண்டனி - மும்முனைப் போட்டியில் முந்தியது யார் ?
இந்த மூன்று டிரைலர்களில் நேற்று காலை வரை "இறைவன்" டிரைலர் 9 மில்லியன்களுடன் முன்னணியில் இருந்தது. அதற்கடுத்தபடியாக "மார்க் ஆண்டனி" டிரைலர் 8 மில்லியன்களுடன் இரண்டாமிடத்திலும், "சந்திரமுகி 2" டிரைலர் 4 மில்லியன் பார்வைகளுடன் மூன்றாமிடத்திலும் இருந்தது.
ஆனால், இன்றைய நிலவரப்படி போட்டி அப்படியே மாறிவிட்டது. "மார்க் ஆண்டனி" டிரைலர் 20 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்தபடியாக அதில் பாதியளவு பார்வைகளுடன் 10 மில்லியனில் "இறைவன்" டிரைலர் இரண்டாமிடத்தில் உள்ளது. "சந்திரமுகி 2" டிரைலர் 5.7 மில்லியன் பார்வைகளுடன் மூன்றாமிடத்தில் இருக்கிறது.
"மார்க் ஆண்டனி" தெலுங்கு டிரைலர் 6.7 மில்லியன்களையும், "சந்திரமுகி 2" டிரைலர் 2.9 மில்லியன்களையும் பெற்றுள்ளது.
டிரைலர்களுக்கு வரவேற்பு எப்படி இருந்தாலும் படம் வெளியான பின்பு எந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதுதான் முக்கியம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!