
சிறுமிகளை நாசம் செய்யும் சைக்கோவை அழிக்கும் இறைவன்
படத்தின் கதை இதுதான் : ஜெயம்ரவி ஒரு டெரர் போலீஸ் அதிகாரி. கொடூர குற்றங்களை செய்யும் குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை செய்து பின்னர் அவர்களை போட்டுத் தள்ளிவிடுவார். சட்டம் தரும் தண்டனை மிகவும் குறைவாக இருக்கும் என்பது அவரது எண்ணம். இதனால் பல மாறுதல்கள், பதவி இழப்புகளை சந்தித்தவர். அவருக்கு சிறுமிகள், இளம் பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ ராகுல் போஸை வேட்டையாடும் அசைன்மெண்ட் தரப்படுகிறது. இதனை அவர் எப்படிச் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஜெயம் ரவியின் மனைவியாக நயன்தாரா நடித்திருக்கிறார். அவருக்கும் சைக்கோ ராகுல் போசுக்கு இருக்கிற ஒரு தொடர்பு சஸ்பென்ஸ்.
தனது முந்தைய படங்களில் மென்மையாண கதை களத்தை கையாண்ட அஹமத் இந்த படத்தில் கொடூர கொலை களத்தை கையில் எடுத்திருக்கிறார். "ராட்சஷன்", "போர்த் தொழில்" வரிசையில் ரத்தம் தெறிக்கும் சைக்கோ த்ரில்லர் படமாக படம் உருவாகி உள்ளது.
இதுகுறித்து அஹமத் கூறும்போது “இது மர்டர் மிஸ்ட்ரி சைக்கோ த்ரில்லர் கதை. இதற்கு முன் இந்த சாயலில் பல படங்கள் வந்திருந்தாலும் புதிதாக ஒரு கதையை இதில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். ஜெயம்ரவி இதற்கு முன் பல படங்களில் போலீசாக நடித்திருந்தாலும் இதில் அவர் முற்றிலும் வேற மாதிரியான போலீஸ். நாயகனுக்கு நிகரான கேரக்டர் வில்லன் ராகுல் போசுக்கு. இத்தனை கொடூரமான வில்லனை இதற்கு முன் பார்த்தில்லை என்கிற அளவிற்கு அவரது நடிப்பு இருக்கும். நயன்தாரா கேரக்டர் பற்றி விரிவாக இப்போது சொல்ல முடியாது. படம் வந்ததும் அனைவரையும் அவரது கேரக்டர் ஆச்சர்யப்படுத்தும்” என்றார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!