
ஒரே நாளில் வெளியான 3 தமிழ் டிரைலர்கள்
நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 படங்களின் டிரைலர்கள் வெளியாகின. ஜெயம் ரவி நடித்துள்ள "இறைவன்", விஷால் நடித்துள்ள "மார்க் ஆண்டனி", ராகவா நடித்துள்ள "சந்திரமுகி 2" ஆகிய டிரைலர்கள் யு டியூபில் வெளியாகின.
தற்போது வரையில் "இறைவன்" டிரைலர் 9 மில்லியன் பார்வைகளையும், "மார்க் ஆண்டனி" டிரைலர் 6.5 மில்லியன் பார்வைகளையும், "சந்திரமுகி 2" டிரைலர் 3.7 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. இந்த மும்முனைப் போட்டியில் "இறைவன்" டிரைலர்தான் முந்துகிறது.
"மார்க் ஆண்டனி", "சந்திரமுகி 2" படங்கள் செப்டம்பர் 15ம் தேதியும், படம் "இறைவன்" படம் செப்டம்பர் 28ம் தேதியும் வெளியாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!