
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சமந்தா
நேற்று படம் வெளியான பின்பு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது தெரிந்ததும் அமெரிக்காவில் இருக்கும் சமந்தா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “இது ஒரு போதும் எளிதாகக் கிடைக்காது, ஒரு கனவு நனவாகும் சாத்தியம்தான் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. குஷிக்கு நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், சில புகைப்படங்களைப் பதிவிட்டு முதல் புகைப்படம், “படம் வெளியான பின்பு எடுத்தது,” 2வது, 3வது புகைப்படங்கள், “வெளியீட்டிற்கு முன்பாக (மன அழுத்தத்துடன்", 4வதாக இருக்கும் வீடியோ, “என்னை உயிருடன் இருக்கும் அதிர்ஷ்டமான பெண்ணாக நீங்கள் உணர வைத்த போது,” என குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!