
டைம் டிராவல் கதையில் விஜய்யின் 68வது படம்: வெங்கட் பிரபு சூசக தகவல்
தற்போது படத்தின் பணிகளுக்காக விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் படத்துக்கான தொழில்நுட்பப் பணிகளை பார்வையிடுகின்றனர்.
இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் “எதிர்காலத்துக்கு வருக”என்று பதிவிட்டுள்ளார். இத்துடன் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவன அலுவலகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் இந்த படத்தின் கதை வெங்கட் பிரபு இயக்கிய "மாநாடு" படம் போன்ற டைம் டிராவல் கதை என்று தெரிகிறது. 50 வருடங்களுக்கு பிறகு தனது மகனுக்கு ஏற்படும் ஆபத்தை தந்தை விஜய் டைம் டிராவல் மூலம் சென்று தடுத்து காப்பாற்றுவது மாதிரியான கதை என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!