
ஜெயிலர், ஜவான் - நெல்சன், அட்லீக்கு ஆலோசனை சொன்ன விஜய்
அடுத்து அதே போன்றதொரு விஷயத்தை அட்லீ தெரிவித்துள்ளார். ஷாரூக்கான் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள "ஜவான்" ஹிந்திப் படத்தின் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய அட்லீ, "ஜவான்" படம் உருவாக விஜய்யும் ஒரு காரணம் என்றார். விஜய், அட்லீ கூட்டணியில் வந்த "தெறி, மெர்சல், பிகில்" ஆகிய மூன்று படங்களுமே சூப்பர் ஹிட்.
தன்னை வைத்து படங்களை இயக்கிய இயக்குனர்களான நெல்சன், அட்லீ ஆகிய இருவரும் அடுத்த கட்டத்திற்கச் செல்ல வேண்டுமென அவர்களுக்கு சரியான ஆலோசனை ஒன்றை விஜய் வழங்கியுள்ளார். நெல்சன் "ஜெயிலர்" மூலம் சாதித்துவிட்டார். அடுத்து "ஜவான்" மூலம் அட்லீயும் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!