
இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி, குழந்தைகளையும் அறிமுகப்படுத்திய நயன்தாரா…
இதுவரையில் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லாத நயன்தாரா தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கை ஆரம்பித்து அறிமுகமாகியுள்ளார். தனது முதல் பதிவாக தனது இரட்டைக் குழந்தைகளான உயிர், உலக் ஆகியோருடன் இருக்கும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். "ஜெயிலர்" படப் பாடலுடன் இடம் பெற்றுள்ள அந்தப் பதிவில், “நான் வந்துட்டேன்னு சொல்லு…." எனக் குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாராவின் இந்த திடீர் மாற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. விரைவில் அதிக பாலோயர்களை நயன்தாரா பெறுவார் என எதிர்பார்க்கலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!