
ஜவான் விழாவில் லியோக்குக் கிடைத்த வரவேற்பு : நொந்து போன ஷாரூக்கான்
ஆனால், நேற்று நடைபெற்ற விழாவில் சிலர் பேசும் போது யதேச்சையாக "லியோ" எனக் குறிப்பிட்டுப் பேசினர். அப்போது அரங்கில் இருந்த ரசிகர்களின் ஆரவாரம் அடங்க நீண்ட நேரம் ஆனது. குறிப்பாக பிரியாமணி பேசும் போது ரசிகர்கள் அவர்களது ஆரவாரத்தை நிறுத்தவேயில்லை. அனிருத் பேசும் போதும் "லியோ அப்டேட்" எனக் கத்தினார்கள். அடுத்து அதுதான் எனப் பேசிவிட்டுச் சென்றார் அனிருத்.
தனது "ஜவான்" படத்திற்கான புரமோஷனுக்காக மும்பையில் இருந்து வந்த ஷாரூக்கான் "லியோ" படத்திற்கு இப்படி ஒரு இலவச புரமோஷன் கிடைத்ததைப் பார்த்து கொஞ்சம் அமைதியாகவே இருந்தார். இப்படத்தில் விஜய்யும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்கிறார்கள்.
விழாவுக்கு வந்திருந்த கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஆரம்பம் முதலே ஆர்ப்பரிப்புடன் இருக்க முதலில் பேச வந்த படத்தின் எடிட்டர் ரூபன் எதையெதையோ பேசி நீண்ட நேரம் இழுத்து பொறுமையை சோதித்து நிகழ்ச்சியின் வேகத்தைக் குறைத்துவிட்டார். படத்தையும் அப்படி இழுஇழுவென இழுத்திருக்க மாட்டார் என்று நம்புவோமாக.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!