
கேப்டன் மில்லர் படப்பிடிப்பை முடித்த பிரியங்கா மோகன்
ஆக 30, 2023
Advertisement
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் "கேப்டன் மில்லர்". சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன், நிவேதிதா சதீஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை பிரியங்கா மோகன் மற்றும் ஜான் கொக்கைன் சம்மந்தப்பட்ட காட்சிகள் நிறைவு பெற்றதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!