
சென்னையில் இன்று ஜவான் பட விழா
இன்று இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழா சென்னையில் நடைபெற உள்ளது. தாம்பரம் அருகில் உள்ள ஒரு தனியார் இஞ்சினியரிங் கல்லூரியில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள ஷாரூக்கான் இன்று(ஆக., 30) சென்னை வருகிறார்.
அது குறித்து, “வணக்கம் சென்னை, நான் வருகிறேன்... அனைத்து ஜவான்கள், சாய்ராம் இஞ்சினியரிங் கல்லூரியில் உள்ள பெண்கள், ஆண்கள், தயாராக இருங்கள். உங்களை சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். நீங்கள் கேட்டால் சில "த த தையா" கூட செய்யலாம்,” என ஷாரூக் தெரிவித்துள்ளார்.
படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகிபாபு, பிரியாமணி என தமிழ் நடிகர்கள், நடிகைகள் இருப்பதால் சென்னையில் பிரம்மாண்ட விழாவை நடத்துகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!