
கோஸ்ட் படத்திற்காக தமிழ் தெலுங்கில் தானே டப்பிங் பேசும் சிவராஜ் குமார்
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் சில நிமிடங்களே வந்து போகும் கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்தார். ஆனாலும் படத்தில் கிளைமாக்சில் அவரது என்ட்ரி மாஸாக அமைந்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றது. இதை தொடர்ந்து தமிழிலும், தெலுங்கிலும் ஜெயிலர் படம் மூலமாக சிவராஜ்குமாருக்கு நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழிலும், தெலுங்கிலும் தானே சொந்த குரலில் இந்த படத்துக்காக டப்பிங் பேசுகிறார் சிவராஜ்குமார். மலையாளத்திலும், ஹிந்தியிலும் மட்டும் அவருக்கு பொருத்தமான குரலில் பேசும் நபரை வைத்து டப்பிங் செய்ய இருக்கிறார்களாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!