
குஷி டிரைலரைப் பார்த்து தியேட்டரை விட்டு வெளியேறிய நாக சைதன்யா
சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துள்ள "குஷி" படம் இந்த வாரம் வெளிவர உள்ளது. கடந்த வாரம் தெலுங்கில் வெளியான "பாய்ஸ் ஹாஸ்டல்" என்ற படத்தின் சிறப்புக் காட்சி ஒன்று ஐதராபாத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு படத்தைப் பார்த்தார் நாக சைதன்யா. இடைவேளையின் போது தியேட்டரில் சமந்தா நடித்துள்ள "குஷி" படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது.
நாக சைதன்யா தியேட்டரில் இருந்த நிலையில் அந்த டிரைலர் திரையிடப்பட்டது. வேறு வழியில்லாமல் டிரைலரைப் பார்த்த நாக சைதன்யா, அதன்பின் "பாய்ஸ் ஹாஸ்டல்" படத்தை முழுவதுமாகப் பார்க்காமல் பாதியிலேயே போய்விட்டாராம். "குஷி" படத்தில் சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் நெருக்கமாக நடித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிவுக்குப் பின் சமந்தாவும், நாக சைதன்யாவும் மற்றவரது படங்களைப் பற்றி எந்த இடத்திலும் பேசிக் கொள்வதில்லை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!