
வெளிநாடுகளில் ரூ.200 கோடி வசூலைக் கடக்குமா ஜெயிலர் ?
இரண்டு வாரங்களைக் கடந்த பின்னும், நேற்றும், நேற்று முன்தினமும் விடுமுறை நாட்கள் என்பதால் இப்படத்திற்கு வசூல் சிறப்பாக இருந்ததாகச் சொல்கிறார்கள். பொதுவாக வெளிநாடுகளில் ஒரு தமிழ்ப் படம் அதிக பட்சமாக இரண்டு வாரங்கள் வரை ஓடும். ஆனால் "ஜெயிலர்" படத்தைப் பொறுத்தவரையில் மூன்றாவது வாரத்திலும் ஓடிக் கொண்டிருக்கிறது. வரும் வார இறுதி வரையிலும் இப்படம் தியேட்டர்களில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இதுவரை 185 கோடி வசூலை இப்படம் கடந்துள்ளது என்கிறார்கள். வரும் வாரத்திலும் இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தால் 200 கோடி வசூலைக் கடக்க வாய்ப்புள்ளது என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் கூறுகிறார்கள். வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் "2.0" படத்தின் வசூலை "ஜெயிலர்" வசூல் கடந்துவிட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!