
கிரிமினல் கதாபாத்திரங்கள் வாங்கிய தேசிய விருதுகள்
ஆனால், கிரிமினல் கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கூட அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கியிருக்கிறார்கள்.
1987ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் படமான "நாயகன்" படத்தில் மும்பை தாதாவாக நடித்த கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. ஆனால், அதை விட சிறந்த நடிப்பை கமல்ஹாசன் வெளிப்படுத்திய "சாகர சங்கமம், ஸ்வாமி முத்யம்" ஆகிய படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை.
1994ம் ஆண்டு வெளிவந்த ஹிந்திப் படமான "பண்டிட் குயின்" படத்தில் கொள்ளைக்காரி பூலான் தேவி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சீமா பிஸ்வாஸ் சிறந்த நடிகைகக்கான தேசிய விருதைப் பெற்றார்.
1997ம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமான "களியாட்டம்" படத்தில் மனைவியைக் கொன்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சுரேஷ் கோபி தேசிய விருதைப் பெற்றார்.
அந்தக் காலங்களில் அதைப் பற்றியெல்லாம் யாரும் பெரிதாகப் பேசவில்லை, விமர்சிக்கவில்லை. ஆனால், தற்போது யு டியுப், சமூக வலைத்தளங்கள், டிவி விவாதங்கள் என பலவற்றில் "புஷ்பா" படத்தில் கிரிமினல் கதாபாத்திரத்தில் நடித்த அல்லு அர்ஜுன் தேசிய விருது பெற்றது குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!