ரூ. 525 கோடியை கடந்த ஜெயிலர் படம் : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
Advertisement
Advertisement
ரூ. 525 கோடியை கடந்த ஜெயிலர் படம் : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
ஆக 25, 2023
அ நிறம் | அளவு
Advertisement
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்ணா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் "ஜெயிலர்". அனிரூத் இசையமைத்தார். ஆக., 10ம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு உலகமெங்கும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று இரண்டு வாரங்கள் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ஏற்கனவே ஜெயிலர் திரைப்படம் உலகளவில் முதல் வாரத்தில் ரூ.375 கோடியை கடந்ததாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் ரூ.500 கோடி வசூலை கடந்ததாக தகவல் வந்தது. இப்போது ஜெயிலர் படம் உலகளவில் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!