
பெங்களூருவில் சினிமா தீம் பார்க் துவக்கிய தமிழ் தயாரிப்பாளர்
இதே போன்ற ஒரு சினிமா தீம் பார்க்கை பெங்களூருவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், கல்வியாளருமான ஐசரி கணேசன் "ஜாலிவுட்" என்ற பெயரில் தொடங்கி உள்ளார். இதனை கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தொடங்கி வைத்தார். கன்னட நடிகர் சிவராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
இதுகுறித்து ஐசரி கணேஷ் கூறும்போது, "டைட்டானிக், தி லாஸ்ட் வேர்ல்ட் மற்றும் ஐரோப்பிய பின்னணியிலான தெரு, ரோமன்சியா, பல்வேறு நீர் பூங்காக்கள் மற்றும் கடல் அலைகளைக் கொண்ட குளம் போன்ற அம்சங்களை கொண்டது இது. புதுமையான சினிமா அனுபவத்தை தேடுபவர்களுக்கான பொழுதுபோக்கு களமாக "ஜாலிவுட்" அமையும்" என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!