
தென்னிந்திய மாநிலங்களில் ரூ.50 கோடி கடந்த ஜெயிலர்
தென்னிந்திய மாநிலங்களில் இப்படம் குறிப்பிடத்தக்க வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ரூ.70 கோடி, கர்நாடகாவில் ரூ.60 கோடி வசூலையும் கடந்துள்ள இந்தப் படம் கேரளாவில் ரூ.47 கோடி வசூலைக் கடந்து ரூ.50 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்த மாநிலங்களில் ஒரு தமிழ்ப் படத்திற்குக் கிடைத்துள்ள அதிகப்படியான வசூல் இது.
ஒட்டுமொத்தமாக தென்னிந்திய மாநிலங்களில் இப்படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் மட்டும் நடித்ததற்கே இந்த வசூல் என்றால் அவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் அங்கெல்லாம் கூட ரூ.100 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!