சித்தா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஆக 22, 2023
Advertisement
நடிகர் சித்தார்த் நடித்து கடைசியாக வெளிவந்த "டக்கர்" திரைப்படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. தற்போது சித்தார்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் "சித்தா" . இந்த படத்தை சேதுபதி பட இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். சித்தார்த் தனது எடக்கி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். பாடல்களை திபு நிணன் தாமஸூம், பின்னணி இசையை விஷால் சந்திரசேகரும் இசையமைத்துள்ளனர்.
இப்படம் சித்தப்பா மற்றும் மகளின் உறவை குறித்து பேசும் படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி இருவரும் டுவிட்டரில் அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த படம் செப்டம்பர் 28ம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!