
கீரவாணிக்கு ஆஸ்கர் விருது தாமதமாக கிடைத்துள்ளது: மத்திய அமைச்சர் எல்.முருகன்
இதன் துவக்க விழா இன்று (ஆக.,19) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: சினிமா தொடங்கிய காலம் முதல் இந்திய சினிமா முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமா தற்போது சர்வதேச அளவில் திகழ்ந்து வருகிறது. அதற்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர்களின் பங்கு முக்கியமானது.
எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் பங்கு அதிகம். பொழுதுபோக்கு கடந்து சமூக அக்கறை கொண்ட படங்களை தமிழ் சினிமா கொடுத்து வருகிறது. ஜென்டில்மேன் படமும் அதற்கு ஒரு உதாரணம். குஞ்சுமோன் தயாரித்த நல்ல படங்கள் அதிகம். கீரவாணி 33 ஆண்டு காலமாக இசைத்துறையில் சாதித்து வருகிறார். இவருக்கு ஆஸ்கர் விருது எப்போதோ கிடைத்து இருக்க வேண்டியது, இது தாமதமாக கிடைத்துள்ளது. அவரை வாழ்த்த வயதில்லை. தமிழ் சினிமா தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. ஜென்டில்மேன்-2 மிகப் பெரிய வெற்றியை பெற எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!