
நிதி அகர்வாலுக்கு ஜாக்பாட்: பிரபாஸ் ஜோடியாகிறார்
இந்த நிலையில் அவர் பிரபாஸ் ஜோடியாக நடிக்க இருக்கிறார். கடந்த ஒரு வருடமாகவே இந்த தகவல் ஓடிக்கொண்டிருந்தாலும் இப்போது அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. முன்னணி தெலுங்கு இயக்குனரான மாருதி தற்போது "ராஜா டீலக்ஸ்" என்ற படத்தை இயக்க இருக்கிறார். இவர் ஏற்கெனவே பாபு பங்காரம், 3 ரோசஸ், பக்கா கமரிக்கல், பிராண்ட் பாபு, லவ்வர்ஸ், கிரீன் சிக்னல் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.
தற்போது அவர் இயக்கும் ராஜா டீலக்ஸ் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பது யார்? என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் தனது 30வது பிறந்த நாளை கொண்டாடிய நிதி அகர்வாலுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு "உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள். விரைவில் உங்களை படப்பிடிப்பில் சந்திக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் ராஜா டீலக்ஸ் படத்தில் நிதி அகர்வால் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!