
கீதா கோவிந்தம் 5ம் வருடத்தை இணைந்து கொண்டாடிய விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா
இந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி ஐந்தாம் வருடத்தை எட்டியுள்ளது. இதனை இயக்குனர் பரசுராமுடன் சேர்ந்து நாயகன் விஜய் தேவரகொண்டாவும் நாயகி ராஷ்மிகாவும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் நெருங்கிய நட்பில் இருந்து வருகின்றனர் என்றும் காதலிக்கின்றனர் என்றும் கூட சொல்லப்பட்டு வரும் நிலையில் இவர்கள் இருவரும் சமீப காலமாக பொது வெளியில் இணைந்து வருவதை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் கீதா கோவிந்தம் படத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காக இருவரும் ஒன்று கூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!