
உருவக் கேலியால் பாதிக்கப்பட்ட அஜித், சூர்யா பட நடிகை
சமீபத்தில் சமீரா ரெட்டி அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது; "சினிமாவில் நான் படங்களில் பிஸியாக நடித்து வந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு முன்பு நான் கர்ப்பமானதாக நிறைய வதந்திகள் பரவின. ஆனால், அதில் உண்மை இல்லை. திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு மகன் பிறந்தான். குழந்தை பிறந்த பிறகு ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மையால் உடல் எடை கூடி குண்டாகி விட்டேன். இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் என்னை உருவ கேலி செய்தார்கள். அவர்களுக்கு பயந்தே நான் வெளியே செல்வதை நிறுத்தி விட்டேன். " என இவ்வாறு வருத்தப்பட்டு தெரிவித்தார் சமீரா ரெட்டி.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!