
சந்தானம் படத்திற்காக டி.இமான் இசையில் பாடிய அரபிக்குத்து ஜொனிதா காந்தி!
இது குறித்து டி.இமான் வெளியிட்டுள்ள பதிவில், சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்காக தான் கம்போசிங் செய்துள்ள ஒரு பாடலை ஜொனிதா காந்தி பாடியதாகவும், சமீபத்தில்தான் இந்த பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ள இமான், இந்த பாடலை முத்தமிழ் எழுதியுள்ளார் என்றும், ஜொனிதா காந்தியுடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதேபோல் ஜொனிதா காந்தியும், இது ஒரு அற்புதமான பாடல். இந்த பாடலை கூடிய சீக்கிரமே அனைவருமே கேட்பீர்கள் என்று ஒரு பதிவு போட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!