
ஜெயிலர் முன்னால் தவிக்கும் ஷங்கர்
கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தைத் தவிர கர்நாடகாவில் 16 கோடியும், ஆந்திரா, தெலங்கானாவில் 17 கோடியும், கேரளாவில் 11 கோடியும் என தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் 44 கோடியை வசூலித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று சிரஞ்சீவி நடித்த "போலா சங்கர்" படம் வெளியானது. ஆனால், அப்படத்திற்கு ஆந்திரா, தெலங்கானாவிலேயே பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் நாள் வசூலாக, உலக அளவில் வெறும் 33 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. அதே சமயம் "ஜெயிலர்" படத்தின் முதல் நாள் வசூல் 90 கோடி வரை இருந்ததாகச் சொல்கிறார்கள்.
குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் "ஜெயிலர்" படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பால், "போலா ஷங்கர்" படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. "போலா ஷங்கர்" வெளியான பல தியேட்டர்களில் இன்று மாலை முதல் "ஜெயிலர்" படத்தைத் திரையிட உள்ளதாகவும் தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!