பாடகி சின்மயி குடும்பத்தில் நடந்த பண மோசடி : சைபர் கிரைமில் புகார்!!
Advertisement
Advertisement
பாடகி சின்மயி குடும்பத்தில் நடந்த பண மோசடி : சைபர் கிரைமில் புகார்!!
ஆக 12, 2023
அ நிறம் | அளவு
Advertisement
சமீபகாலமாக மொபைலுக்கு வரும் அழைப்புகளில் நாம் ஓடிபி எண்ணை பகிர்ந்தால் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோய்விடும் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓடிபி எண்ணையே பகிராமல் தனது குடும்பத்தைச் சார்ந்த சிலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருப்பதாக பாடகி சின்மயி ஒரு பதிவு போட்டுள்ளார். மேலும், தொலைபேசிக்கு ஒரு லிங்க் வருவதாகவும், அந்த லிங்கை கிளிக் செய்தால் நம்முடைய வங்கி கணக்கில் இருக்கும் பணம் காணாமல் போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இது போன்ற பண மோசடி வயதானவர்களை குறி வைத்தே நடப்பதாக தெரிவித்துள்ள சின்மயி, இந்த மோசடி குறித்து சைபர் க்ரைம் போலீசில் தங்களது தரப்பினர் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!