
முன்னாள் ராணுவ வீரராக நடிக்கும் ஜெய் ஆகாஷ்
படம் பற்றி ஜெய் ஆகாஷ் கூறியதாவது: ராணுவத்தில் பணிபுரிந்து ஓயுவு பெறும் வீரர் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்களை கண்டு ஆவேசம் அடைகிறார். அதை தட்டி கேட்க முடிவு செய்து ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றிய எக்ஸ் ஆர்மி மேன்கள், மற்றும் போரில் காயம் அடைந்து ஊனமுற்று இன்னும் தேச பக்தியுடன் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை ஒரு படைபோல் திரட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் அக்கிரமக்காரர்களை தேடிப் பிடித்து எப்படி பழிவாங்குகிறார் என்பதை ஆக்ஷன் அதிரடியுடன் இப்படம் சொல்கிறது.
எல்லையை காப்பாற்றியவர்கள் நாட்டுக்குள் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்டு அவர்களை எப்படி காக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, பெங்களுர், மும்பையில் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது. என்றார் ஜெய் ஆகாஷ்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!