
அபிராமி வெங்கடாசலம், அம்மு அபிராமி இணைந்து நடித்த வான் மூன்று
படம் பற்றி இயக்குனர் முருகேஷ் கூறியதாவது: வான் என்பதற்கு தமிழில் நிறைய அர்த்தங்கள் உள்ளது. இதில் சிலரின் வாழ்க்கையையும், அவர்களின் காதலையும் பற்றி சொல்வதற்காகவே "வான் மூன்று" என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தோம். அனைத்து வயதினரையும் கனெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக நிறைய மாற்றங்கள் இந்தக் கதையில் செய்தோம். பல நடிகர்களிடம் பேசிதான் இறுதியாக இந்தக் கதைக்குள் அபிராமி, ஆதித்யா எல்லாரும் வந்தார்கள். இது என்னுடைய முதல் படம் என்பதால், மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை என்று ஒரு பீல் குட் படமாக உருவாக்கினேன். வெவ்வேறு வயதினரிடையே உருவாகும், காதலையும், பிரிவையும் சொல்லும் படம். என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!