
‛ஜெயிலர் கொண்டாட்டம் : கொண்டாடிய ரஜினி குடும்பத்தினர் ; தனியாக ரசித்த தனுஷ்
சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் காலை காட்சியில் ஜெயிலர் படத்தை காண லதா ரஜினிகாந்த், ஜஸ்வர்யா ரஜினிகாந்த், லிங்கா, யாத்ரா ஆகியோர் வந்தனர். இவர்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் படத்தை காண வந்திருந்தார். அப்போது படத்தின் இடைவேளையில் ரசிகர்கள் முன்னிலையில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் ஜெயிலர் படத்திற்காக கேக் வெட்டி கொண்டாடினர். இவர்களுக்கு பின் இருக்கையில் தான் தனுஷ் அமர்ந்து இருந்தார். ஆனால் அவரை அழைக்கவில்லை. இந்த கொண்டாட்டத்தை தனுஷ் கைதட்டி ரசித்து கொண்டிருந்தார்.
தனுஷூம், ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழ்கின்றனர். இதனாலேயே தனுஷை இந்த கொண்டாட்டத்தில் ரஜினி குடும்பத்தினர் அழைக்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!