
‛அலைபாயுதே பாணியில் உருவாகி உள்ளதா ‛குஷி திரைப்படம் ? - இயக்குனர் விளக்கம்
இதுபற்றி இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் சிவா நிர்வானா, “அலைபாயுதே மட்டுமல்ல மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் மற்றும் இதேபோல கதை அம்சம் கொண்ட அனைத்து படங்களையும் எடுத்துக் கொண்டால் அதில் காதல் மற்றும் திருமணம் சார்ந்த விஷயங்களை மையப்படுத்தி தான் கதைகள் உருவாகி இருக்கும். காதலையும் திருமணத்தையும் பற்றி ஒரு படத்தை எடுக்கும்போது மேலோட்டமாக பார்த்தால் இந்த விஷயங்களை தவிர்க்க முடியாது. அதே சமயம் இந்த காலகட்டத்திற்கு ஏற்ப இதுபோன்று காதல் அல்லது திருமண ஜோடிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை வேறு ஒரு கோணத்தில் இருந்து இந்த படம் அலசுகிறது” என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!