
செக் பவுன்ஸ் வழக்கில் கோச்சடையான் பட தயாரிப்பாளருக்கு ஆறு மாத சிறை தண்டனை
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் இந்த படத்தின் அனிமேஷன் பணிகளை கவனித்த நிறுவனத்திற்கு பட உரிமையில் 20 சதவீதமும், 12 சதவீத கமிஷன் தொகையும் அளிப்பதாக கூறி 5 கோடி ரூபாய்க்கான காசோலையை 2014ல் வழங்கி உள்ளார். ஆனால் அப்படி அளிக்கப்பட்ட காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என திரும்பியது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனம், முரளி மனோகர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. தற்போது இந்த வழக்கில் முரளி மனோகருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது கீழமை நீதிமன்றம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!