
வெளியானது ‛ஜெயிலர் படம் : ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளியாகி உள்ளது. அதேசமயம் தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. காலை 8:00, 9:00 மணிக்கே காட்சிகள் துவங்கின. இதனால் படத்தை முன்கூட்டியே பார்க்க பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய ஊர்களுக்கு தமிழ் ரசிகர்கள் படையடுத்தனர். காலை முதலே படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒருசில நெகட்டிவ்வான விமர்சனங்களும் வருகின்றன.
ரஜினியின் கடைசி இரண்டு படங்களான தர்பார் மற்றும் அண்ணாத்த படங்கள் சரியாக போகவில்லை. அதேப்போல் நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட்-டும் அதிகளவில் விமர்சனங்களை சந்தித்தன. இதனால் இந்த படம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதை ஓரளவுக்கு படம் பூர்த்தி செய்துள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஜினி படம் வெளியீடு என்றாலே ஓபனிங்கிற்கு நல்ல வரவேற்பு இருக்கும். அந்தவகையில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் அவரது ரசிகர்கள் ஆட்டம், பாட்டு, பட்டாசு, பேனர்களுக்கு மாலை அணிவித்தல் மற்றும் சில ஊர்களில் பாலாபிஷேகம் போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அதேசமயம் இந்த படத்திற்கு தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் அனுமதிக்கப்படாதது ரஜினி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!