
ரைசா வில்சனை கடித்த தெருப்பூனை
இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். தெருவில் இருந்த பூனையை தூக்கி ஆசையுடன் கொஞ்ச முயற்சித்தபோது அது அவரை கடித்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி ரைசா கூறும்போது, தெருவில் இருக்கும் பூனைகள் நமது வீட்டில் இருப்பதை போல அல்ல என்று கூறியுள்ளார். இத்தனைக்கும் ரைசா தனது வீட்டிலேயே இரண்டு பூனைகளை செல்லமாக வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!