
இயக்குனர் சித்திக்கிற்கு திடீர் மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி
69 வயதான சித்திக்கிற்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் கொச்சி அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது ஆபத்தான நிலையில் அவசர பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. உயிர்காக்கும் கருவிகள் உதவியால் அவர் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!