
கூட்டத்தில் திடீரென நெருங்கிய கேரள ரசிகர் ; அழகாக டீல் செய்த தமன்னா
காவலா பாடல் மூலம் சமீப நாட்களாக மொழிகளை தாண்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் தமன்னா. இதனால் அவரை பார்ப்பதற்காக கடை முன்பாக ரசிகர் கூட்டம் முண்டியடித்தது. திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிவப்பு கம்பள விரிப்பில் அவர் நடந்து வந்த போது திடீரென இளம் ரசிகர் ஒருவர் தமன்னாவின் முன் வேகமாக வந்து அவரது கையைப் பற்றி குலுக்க முயன்றார்.
அருகில் இருந்த பவுன்சர்கள் சுதாரித்து உடனடியாக அவரை இழுத்து அப்புறப்படுத்த முயன்றனர். இருந்தாலும் தமன்னாவுக்கு கை கொடுத்து ஒரே ஒரு செல்பி எடுத்துக்கொள்ள வேண்டுகோள் வைத்தார் அந்த இளைஞர் தமன்னாவும் இந்த விஷயத்தை சீரியஸாக்காமல் அந்த இளைஞருடன் கைகுலுக்கி அவர் செல்பி எடுக்கும் வரை பொறுமையாக போஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!