
தமிழ் படத்திற்காக தெருக்கூத்து பயிற்சி பெற்ற பரியா அப்துல்லா
இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கும் "வள்ளி மயில்" படத்தின் மூலம் தமிழக்கு வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் பரியா அப்துல்லா தெருக்கூத்து கலைஞராக நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது " எனது அக்கா சென்னையில் இருப்பதால் அடிக்கடி சென்னை வந்து நானும் தமிழ் கற்றுக் கொண்டேன். வள்ளி மயில் படப்பிடிப்பு தளத்திலும் தமிழ் கற்றேன். இப்போது தமிழ் பேசுவதை முழுமையாக புரிந்து கொள்ள முடியும், ஓரளவுக்கு பேசவும் முடியும்.
அடிப்படையில் நான் ஒரு நாடக நடிகை, ஆங்கில நாடகத்தில் நடித்திருக்கிறேன். அந்த அடிப்படையில்தான் இந்த படத்திற்கு நான் தேர்வு செய்யப்பட்டேன். இங்கு தெருக்கூத்து கலை பற்றி முறையாக பயிற்சி பெற்று நடிக்கிறேன். வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் பரியா அப்துல்லா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!