
“இது ஜெயிலர் வாரம்” : தனுஷ் பதிவு
ரஜினியின் மூத்த மருமகனான தனுஷ், அவரது மனைவியும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவைப் பிரிந்துவிட்டார் என்று சொல்லப்பட்டாலும் தன்னை ரஜினியின் ரசிகர் என இந்தப் பதிவின் மூலம் அவர் காட்டியிருக்கிறார். "தலைவரின் ரசிகர் தனுஷ்" என தனுஷின் பதிவில் ரஜினி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
"ஜெயிலர்" படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ள கன்னட நடிகரான சிவராஜ்குமார், மேடையில் “தனுஷை ரொம்பப் பிடிக்கும்” என ரஜினிகாந்த் முன்னிலையில் பேசினார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அப்போது பார்வையாளர்கள் இருக்கையில் ஐஸ்வர்யா உள்ளிட்ட ரஜினி குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!