
சிரஞ்சீவி பாடலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்
ஆக 06, 2023
Advertisement
சிவா இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டில் தமிழில் வெளிவந்த வேதாளம் படத்தை தற்போது தெலுங்கில் இயக்குனர் மெகர் ரமேஷ் இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி வைத்து போலா சங்கர் என பெயரில் ரீமேக் செய்துள்ளார். தமன்னா, கீர்த்தி சுரேஷ், சுஷாந்த், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாஹர் மகதி இசையமைக்கும் இந்த படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அடுத்த வாரம் ஆகஸ்ட் 11ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இப்போது இந்த படத்திலிருந்து " ரேஞ் ஆப் போலா" எனும் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டு சிரஞ்சீவி மற்றும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!