ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் படத்திற்குக் கதாநாயகி தேர்வு
ஆக 06, 2023
Advertisement
தமிழ் சினிமாவில் சில மிரட்டலான ஆக்ஷன் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். அவர் கடைசியாக இயக்கிய "தர்பார்" படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் 65வது படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால், முருகதாஸ் சொன்ன கதை பிடிக்கவில்லை என விஜய் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகின.
அதற்கடுத்து அனிமேஷன் படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஏஆர் முருகதாஸ் இருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. அந்தப் படமும் இதுவரையில் ஆரம்பமாகவில்லை. இதனிடையே, சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்று ஆரம்பமாக உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளிவந்தன.
கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வருவார் என்கிறார்கள். அப்படத்திற்கான கதாநாயகி தேடல் நீண்ட நாட்களாகவே நடைபெற்று வந்தது. சில முன்னணி நடிகைகளிடம் பேசி கடைசியில் "சீதா ராமம்" கதாநாயகி மிர்ணாள் தாக்கூரைக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில வாரங்களில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!