
வசீகரிக்கும் ‛அழகு - கங்கனாவின் சந்திரமுகி தோற்றம் வெளியீடு
இன்று(ஆக., 5) "சந்திரமுகி" கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனாவின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நேர்த்தியான அழகுடன் இருக்கும் கங்கனாவின் தோற்றம் வசீகரமாகவே அமைந்துள்ளது. தமிழிலும் தடம் பதிக்க ஆசைப்படும் கங்கனாவிற்கு இந்த "சந்திரமுகி" கைகொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.
இதற்கு முன்பு அவர் தமிழில் ஆர்வத்துடன் அறிமுகமான "தாம் தூம்", படமும், ஜெயலலிதாவின் பயோபிக் படமாக வெளிவந்த "தலைவி" படமும் வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. "சந்திரமுகி" படத்தின் முதல் பாகத்தில் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா ஆகியோர் நடித்தும் "சந்திரமுகி"யாக நடித்த ஜோதிகா தான் அப்படத்தில் அதிகம் பேசப்பட்டார். அது போல "சந்திரமுகி 2" படத்தில் கங்கனாவும் பேசப்படுவாரா என்பது படம் வெளிவந்த பிறகு தெரிய வரும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!