
டிமான்ட்டி காலனி 2 படத்தின் முதல்பார்வை வெளியானது
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. டிமான்ட்டி காலனி படத்தின் சம்பவங்களுக்கு முன்பு நடந்த கதையும், அப்படத்தின் முடிவுக்கு பிறகு நடக்கும் சம்பவங்களும் சேர்த்து, இப்படத்தின் திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. அருள் நிதி உடன் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் முதல் பார்வையை மோஷன் போஸ்டர் உடன் ஹாரராக வெளியிட்டுள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. "டிமான்ட்டி காலனி 2" படத்தின் டீசர், இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!