
ஜெயிலர் - தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் புதிய வேண்டுகோள்
இதனிடையே, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், “ஜெயிலர்" ஆடியோ இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் அவர்கள், அனைவரும் திரையரங்குக்கு வந்து படம் பாருங்கள் என்று பேசியுள்ளார். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. அதுபோல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர் படம் திரையிட ஆவலாக உள்ளனர். அதனால், சூப்பர் ஸ்டார் அவர்கள் தமிழகத்தில் உள்ள எல்லா திரையரங்குகளிலும் ஜெயிலர் படத்தை திரையிட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!