
கடும் போட்டியில் கங்குவா Vs கேப்டன் மில்லர்
அதன் தமிழ் வீடியோ 30 மில்லியன் பார்வைகளைக் கடந்து தமிழ் சினிமாவில் அதிகப் பார்வைகளைப் பெற்ற "க்ளிம்ப்ஸ்" என்ற சாதனையைப் படைத்தது. கடந்த எட்டு நாட்களில் அதன் பார்வை 31 மில்லியனைத் தாண்டியுள்ளது. சூர்யாவின் படங்களுக்கு வழக்கமாகக் கிடைக்கும் பார்வைகளை விட இது மிக அதிகம்.
இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் "கேப்டன் மில்லர்" படத்தின் டீசர் மூன்று தினங்களுக்கு முன்பு வெளியானது. 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் என்ற புதிய சாதனையை இது படைத்தது. இந்த மூன்று நாட்களில் 27 மில்லியன் பார்வைகளை இந்த டீசர் கடந்துள்ளது.
"கங்குவா" பட க்ளிம்ப்ஸ், "கேப்டன் மில்லர்" பட டீசர் இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு புதுப் புது சாதனைகளைப் படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் வீடியோக்கள் அடுத்த கட்டமாக அதிகப் பார்வைகளைப் பெற ஆரம்பித்துள்ளன.
இந்த சாதனைகள் "ஜெயிலர், லியோ" ஆகியவற்றின் டீசர் அல்லது டிரைலர் வரும் போது இன்னும் அதிகமான பார்வைகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!