
வேட்டையன் தோற்றத்தில் ராகவா லாரன்ஸ்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படம் வெளியாக உள்ளது. முதல் பார்வை போஸ்டரில் "வேட்டையன்" தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் இருக்கும் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்கள். கங்கனா ரணவத், ராதிகா, வடிவேலு, சிருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன், மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு "பாகுபலி, ஆர்ஆர்ஆர்" படங்களின் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.
முதல் பார்வை போஸ்டரைப் பகிர்ந்து ராகவா லாரன்ஸ், “தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நன்றி. "வேட்டையன்" முதல் பார்வையை உங்களுக்காக வெளியிடுகிறோம், உங்களது ஆசீர்வாதம் தேவை,” எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!