
ஜூஜூபி பாடலிலும் வம்பிழுக்கிறாரா ஜெயிலர்?
இரண்டாவது பாடலான "ஹூக்கும்" பாடலில், “தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா”, “உன் அலும்ப பார்த்தவன்”, “இவன் பேர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு,” போன்ற வரிகள் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தின. ரஜினிகாந்தின் "சூப்பர் ஸ்டார்" பட்டத்திற்கு ஆசைப்படும் நடிகர்களை விமர்சித்து அந்தப் பாடல் எழுதப்பட்டது என விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக விஜய் ரசிகர்கள் கோபமடைய சமூக வலைத்தளங்களில் வார்த்தை மோதல்கள் ஆரம்பமானது.
ரஜினிகாந்தின் வசூல் சாதனைகளை முறியடிக்கும் ஒரே நடிகர் விஜய், விஜய் தான் தமிழ் சினிமாவில் நம்பர் 1 என விஜய்யின் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர். அடுத்து நேற்று வெளியான மூன்றாவது பாடலான "ஜூஜூபி" பாடலில் இடம் பெற்றுள்ள “பகையாகிப் போனா பலியாவ வீணா”, “இவன் ரூட்டே வேறு,”, “கரண்ட்டுல கைய வச்சிபுட்ட, அது தொட்ட உடனே தூக்காமதான் விடுமா உன்னைய,”, “புலிக்கே பசிய தூண்டிபுட்டே அது ரத்தக்காவு வாங்காமத்தான் விடுமா உன்னைய,” ஆகிய வரிகள் யாரை “ஜூஜூபி” என நினைத்து எழுதப்பட்டது என்பது இப்போது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.
இதனால், நாளை "ஜெயிலர்" இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் என்ன பேசப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!