
கார்த்தி படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம்
கார்த்தி தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கார்த்தியின் 27வது படத்தை 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இந்த படத்தை நடிகர் சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம் செய்கிறார். மற்ற அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பி.சி. ஸ்ரீராம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!