
யோக்கியன் : ஒரே நேரத்தில் ஓடிடி, தியேட்டரில் வெளியாகிறது
இதுகுறித்து ஜெய் ஆகாஷ் கூறியதாவது: ஒரே நேரத்தில் தியேட்டரிலும், ஒடிடியிலும் "யோக்கியன்" படம் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. என்னுடைய உதவி இயக்குனர் சாய் பிரபா மீனா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறேன். இதற்காக நான் மட்டுமல்ல பட குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள்.
கெட்ட போலீஸ் அதிகாரியின் மகன் எப்படியிருக்கிறான் என்பதை மையமாக கொண்டு இக்கதை உருவாகியுள்ளது. அத்துடன் நல்ல பாடல், இசை, காட்சிகள் என கமர்ஷியல் அம்சங்களுடன் படம் வந்திருக்கிறது. நல்லவன் கெட்டவன் ரோல்களில் ஹீரோக்கள் நடிக்கின்றனர். அப்படியொரு முயற்சியாகவே நான் இதில் நடித்திருக்கிறேன். ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடிப்பேன் என்பதை இதில் காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!