
ஜெயிலர் இசை வெளியீட்டு நாளில் மில்லர் டீசர்
பொதுவாக பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களின் இசை வெளியீடு, டிரைலர் வெளியீடு ஆகியவை நடந்தால் வேறு எந்த நடிகரும் அவர்களது பட இசை, டீசர், டிரைலர் வெளியீடுகளை அன்றைய தினம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். போட்டியில் சிறிய நடிகரின் படம் காணாமல் போய்விடும்.
ஆனால், நாளை ரஜினிகாந்த்தின் "ஜெயிலர்" படத்தின் இசை வெளியீடு நடக்க உள்ள நிலையில் அவரது முன்னாள் மருமகனான நடிகர் தனுஷின் "கேப்டன் மில்லர்" படத்தின் டீசர் வெளியீடும் நடக்க உள்ளது. ஏட்டிக்குப் போட்டியாக இது நடக்கவில்லை. நாளை தனுஷின் பிறந்தநாள். அதனால்தான் "கேப்டன் மில்லர்" டீசர் வெளியாகிறது. மேலும் தனுஷ் இயக்கி நடித்து வரும் அவரது 50வது படம் பற்றிய அறிவிப்பும் நாளை வெளியாக உள்ளதாகச் சொல்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!