
சுயநினைவை இழந்த ஹாலிவுட் நடிகை டோரி கெல்லி : மருத்துவமனையில் திவீர சிகிச்சை
30 வயதான டோரி கெல்லி, லாஸ் ஏஞ்சல்ஸ் டவுன் டவுனில் உள்ள ஓட்டலில் நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது சுயநினைவை இழந்துள்ளதாகவும், அவரது முக்கிய உறுப்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் டோரி கெல்லியின் ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!